தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.., எந்தவொரு தளர்வும் கிடையாது!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.., தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சுமார் 36 ஆயிரத்தை தாண்டி தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் 2,47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ் நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு ஆனாது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது அதிலும் நேற்று புதிய உச்சமாக சுமார் 400 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இன்னும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் ஊரடங்கு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மே.24 ஆம் தேதியில் ஊரடங்கு முடியும் நிலையில் ஊரடங்கை நீட்டித்து முக்கிய உத்தரவை முதலமைச்சர் அறிக்கை வெளியீடு.

அதில் மே.25 முதல் அடுத்த ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மட்டும் தான் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்:

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் மருந்தகங்கள்.
பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்.
பொது மக்களுக்கு தேவையான காய்கிறகல் பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்ன நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அணைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
தலைமைச் செயலுகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னணு சேவை (E-commerce) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் பங்கு வழக்கம் போல் இயங்கும்.
ATM மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுதிக்கப்படும்.
வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
தடையின்றி தொடர்ந்து செயல் பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி அனுமதிக்கப்படும்.

மேலும் இன்றும் மற்றும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி நாளை வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் வெளியூர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.., எந்தவொரு தளர்வும் கிடையாது!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.., எந்தவொரு தளர்வும் கிடையாது!

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *